கால்தடமே பதியாத
கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில்
பூச்செடி ஆக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத
மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும்
மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவளிருக்க
மறுகரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே
வேடிக்கை பார்க்கிறதே