AgaraMudhalvan
Epic Legend
꧁❤ அதீத நேசம் கொண்ட பெண்❤꧂
அதீத நேசம் கொண்ட பெண்ணை நேசித்தல் என்பது அத்தனை சுலபமில்லை...!
தனக்கே தனக்கு மட்டுமே என்று உரிய கர்வத்துடன் உலா வரும் பெண்ணின் ப்ரியங்களை உள்வாங்கி கொள்வது அத்தனை இயல்பான விஷயமில்லை....
அத்தனைக்கும் தானே என்று ஓடி வருவாள்..
அனைத்தையும் தன் தலை மீதே சுமப்பாள்...
அதீத அன்பின் போர்வையை இழுத்து போர்த்திக்கொள்வாள்..
எல்லா நிகழ்வையும் உங்களிடமே கொட்டி தீர்ப்பாள்..
இதுவரை தன் வாழ்வில்
தனிமையையே நேசித்து வந்த ஒருத்திக்கு உற்ற துணை இதுதான் என்ற முடிவுக்கு வந்தபின் உங்களை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடமாட்டாள்....
சிறு அன்பையும் பெருமகிழ்வாய் பொழிவாள்..
குழந்தையாய் தவழ நினைப்பாள்..
உங்கள் அதீத கோவமெல்லாம் அவளுக்கு மகிழ்வையே தரும்...
அதில் உங்களின் இருப்பை அறிவாள்...
உங்கள் அதீத உணர்ச்சிகளெல்லாம் அவளுக்கு கிளர்ச்சியே தரும்.
அதில் உங்களின் நம்பிக்கையை அறிவாள்.
அவளின் அதீத நேசங்கள் எல்லாம் உங்களுக்கு பிரம்மிப்பாய் தோன்றக்கூடும்..
ஆதலால்,
அன்பென்றால் என்ன
அதீத அக்கறை என்றால் என்ன
நேசத்தின் உச்சம் என்ன என்பதையெல்லாம் அறிய அதிகம் நேசம் கொண்ட பெண்ணை நேசியுங்கள்.
நேசம் என்றால் என்னவென்று மணிக்கொரு முறை
விதைத்து கொண்டே இருப்பாள்...