அழகான இயற்கை சூழ்நிலையில்
ஏகாந்தமாய் உன் கரம் சேர்த்து
விரல் கோர்த்து
ஒரு நடைப்பயணம்.
இந்த மாதிரி அழகான இடங்களை
காணும் போதெல்லாம்
உன் ஞாபகம் தான்.
மெல்லிய இன்னிசை
எப்போதும் தேநீர் அருந்தும்
கடையில் தேனீர்.
அந்த நடை பயணமும் முடியாது
நீண்டு கொண்டே இருக்க வேண்டும்.
வேறென்ன வேண்டும்!
வேறென்ன வேண்டும்!
*என் கைபிடித்து*
*எங்கேனும்*
*அழைத்துச்செல்*
*வெகுதூரம்*
*உன்னோடு*
*பயணம்*
*செய்யவேண்டும்*