
என் தேவதையின் இதழ்கள்
சிரிப்பிழந்து வரண்டது
அதிகபட்சம் எதற்காக
என்று எனக்கு தெரியும் !
என் தேவதையின் கண்கள்
உயிர் இழந்து கசிந்தது
அதிகபட்சம் எதற்காக
என்று எனக்கு தெரியும் !
என் தேவதையின் மொழிகள்
மௌனமாகி முடங்கியது
அதிகபட்சம் எதற்காக
என்று எனக்கு தெரியும் !
என் தேவதையின் இரவுகள்
நிலவிழந்து தவித்தது
அதிகபட்சம் எதற்காக
என்று எனக்கு தெரியும் !
அவள் சொல்லாமலேயே
இவ்வளவும் தெரிந்த
என்னை
தெரியாமல் போனது
அவள் பிழையா ! !
~கேட்டதில் பிடித்தது
Last edited:


