P
PRANISHA
Guest
இதயம் இல்லா
இயந்திரத்தில்
இணையம் மூலம்
நான் கண்டெடுத்த
நல் இதயம் கொண்ட
உன்னைப் பற்றி சொல்லவா?
நீ தரும் நட்பின் அன்புக்கு,
ஒரு தோழியாக இந்த கவிதையையே
கொடுக்க முடிகிறது உன் பிறந்த நாள் பரிசாக...
முகம் பார்த்து கதைத்தது இல்லை!!
முகவரிகளும் கொடுத்தது இல்லை!!
ஆனாலும் முக்கியமானவனாகி விட்டாய்!!!
நீல கட்டை விரலை உயர்த்தும் நண்பனை விட,
இதயம் கொடுக்கும் உன் மீது சற்று பிரியம் அதிகம் தான்..
இடுகைகள் தேடி நீ
இதயங்கள் இடுகையில்
புன்னகை பூக்கிறது என் இதயம்!!!
மாயங்கள் நிறைந்த
இந்த மெய் நிகர் உலகில்
மாறாத அன்பு கொண்டவன் நீ!!!
தோள் கொடுக்கும் தோழனாக
நீ தோள் கொடுத்தாய் பலமுறை எனக்கு ...
வருத்தமான தருணங்களையும் மகிழ்வாக்கும்
உன் வாஞ்சையான பேச்சுக்கள்..
எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் இயல்பு உனக்கு மட்டுமே சாத்தியம் ...
அறிமுகம் இல்லாமல்
வந்தோம்..
அடிக்கடி
பேசி கொண்டோம்
உறவுகளுக்கு மேலே..
உயிர் ஆனோம்....
காலங்கள்
கடந்து சென்றாலும்
கடைசி வரை
தொடர வேண்டும்..
இன்று பிறந்த உனக்கு இனியநாளில் பரிசாய்
இக்கவிதை விட சிறப்பாக ஏதும் என்னால் தந்துவிட முடியாது ...
நாளெல்லாம் நட்புடனே நாமென்றும் நடைபோட
ஆண்டு நூறு நீ கடந்து ஆனந்தமாய் நீ வாழ .
நட்பின் வாழ்த்துக்கள் இந்த
நண்பியின் வாழ்த்துகள் ..........
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா .......



Happy birthday @Sweet bae 


இயந்திரத்தில்
இணையம் மூலம்
நான் கண்டெடுத்த
நல் இதயம் கொண்ட
உன்னைப் பற்றி சொல்லவா?
நீ தரும் நட்பின் அன்புக்கு,
ஒரு தோழியாக இந்த கவிதையையே
கொடுக்க முடிகிறது உன் பிறந்த நாள் பரிசாக...
முகம் பார்த்து கதைத்தது இல்லை!!
முகவரிகளும் கொடுத்தது இல்லை!!
ஆனாலும் முக்கியமானவனாகி விட்டாய்!!!
நீல கட்டை விரலை உயர்த்தும் நண்பனை விட,
இதயம் கொடுக்கும் உன் மீது சற்று பிரியம் அதிகம் தான்..
இடுகைகள் தேடி நீ
இதயங்கள் இடுகையில்
புன்னகை பூக்கிறது என் இதயம்!!!
மாயங்கள் நிறைந்த
இந்த மெய் நிகர் உலகில்
மாறாத அன்பு கொண்டவன் நீ!!!
தோள் கொடுக்கும் தோழனாக
நீ தோள் கொடுத்தாய் பலமுறை எனக்கு ...
வருத்தமான தருணங்களையும் மகிழ்வாக்கும்
உன் வாஞ்சையான பேச்சுக்கள்..
எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் இயல்பு உனக்கு மட்டுமே சாத்தியம் ...
அறிமுகம் இல்லாமல்
வந்தோம்..
அடிக்கடி
பேசி கொண்டோம்
உறவுகளுக்கு மேலே..
உயிர் ஆனோம்....
காலங்கள்
கடந்து சென்றாலும்
கடைசி வரை
தொடர வேண்டும்..
இன்று பிறந்த உனக்கு இனியநாளில் பரிசாய்
இக்கவிதை விட சிறப்பாக ஏதும் என்னால் தந்துவிட முடியாது ...
நாளெல்லாம் நட்புடனே நாமென்றும் நடைபோட
ஆண்டு நூறு நீ கடந்து ஆனந்தமாய் நீ வாழ .
நட்பின் வாழ்த்துக்கள் இந்த
நண்பியின் வாழ்த்துகள் ..........
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா .......

Last edited by a moderator:
