Heartbreaker
Newbie
பூமி உருண்டையின் ஒரு மூலையில்
விடியலின் ஒளிக் கீற்றாய் நீ!
இருள் சூழ்ந்த இரவினில்
வழிகாட்டும் நிலவாய் நான்!
இரு துருவங்களாய் நாம் இருந்தாலும்
இயற்கையின் விதியோ நம்மை இணைத்தது!
வானம் தொடும் தூரம் என்று
வாக்குவாதம் செய்தோம் நாம் அன்று!
ஆனால், பூமி தொடும் வேகம் கண்டு
புன்னகைக்கிறோம் நாம் இன்று!
மலர்ந்த மலரின் வாசம் போலே
மனதில் கலந்த நேசம் நீ!
ஊசிமுனை இடையில் நூலென
உயிரில் கலந்த உறவிது!
பாசி படிந்த கல்வெட்டாய்
பழமை மாறா நம் காதலிது!
காலம் கரைந்தாலும், கடிகாரம் உடைந்தாலும்
காவியம் படைப்போம் நாம் இருவரும்
விடியலின் ஒளிக் கீற்றாய் நீ!
இருள் சூழ்ந்த இரவினில்
வழிகாட்டும் நிலவாய் நான்!
இரு துருவங்களாய் நாம் இருந்தாலும்
இயற்கையின் விதியோ நம்மை இணைத்தது!
வானம் தொடும் தூரம் என்று
வாக்குவாதம் செய்தோம் நாம் அன்று!
ஆனால், பூமி தொடும் வேகம் கண்டு
புன்னகைக்கிறோம் நாம் இன்று!
மலர்ந்த மலரின் வாசம் போலே
மனதில் கலந்த நேசம் நீ!
ஊசிமுனை இடையில் நூலென
உயிரில் கலந்த உறவிது!
பாசி படிந்த கல்வெட்டாய்
பழமை மாறா நம் காதலிது!
காலம் கரைந்தாலும், கடிகாரம் உடைந்தாலும்
காவியம் படைப்போம் நாம் இருவரும்