
குளிரும் பனியும்
என்னை சுடுதே சுடுதே
உடலும் உயிரும்
இனி தனியே தனியே
ஓ..காமன் நிலவே
என்னை ஆளும் அழகே
உறவே உறவே
இன்று சரியோ பிரிவே
நீராகினால் நான் மழையாகிறேன்
நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்
ஆயுள் வரை உந்தன்
வாழ்வில் உறவாட
வருகிறேன்
காதல் வரலாறு
எழுத என் தேகம்
தருகிறேன்
பனி மலரை
போலே
என் மனதை
நனைந்தேன்
உன் நினைவில்
நானே
உலகை தழுவும்
நள்ளிரவை போலே
என்னுள்ளே பரவும்
ஆருயிரும் நீயே
என்னை மீட்டியே நீ
இசையாக்கினாய்
உனை ஊற்றியே
என் உயிர் ஏற்றினாய்