❤•காதலில் தொலைகிறேன் நான்•❤
வெறுப்பதற்கான
காரணங்கள்
பல இருந்தாலும்
வெறுக்க முடியவில்லை..
நீ அங்கும் நான்
இங்கும் என
தவித்துக் கொண்டிருந்தாலும்
வேண்டாம் என
தவிர்க்க இயலவில்லை..
அலைபேசி வழியே
நம் காதல்
அல்லாடிக் கொண்டிருக்கிறது..
நெருங்கவும் இயலாமல்
விலகவும் முடியாமல்
தொல்லை செய்யும்
இந்தக் காதலில்
நித்தமும் தொலைகிறேன் நான்!
