பிரிவைத் தந்து நினைவு எடுத்துச் செல்ல முடியாது.
பிரிவு என்பது அப்போதைக்கு வலி. நினைவு என்பது காலமெல்லாம் வலி.
இதில் சில வலிகள் இன்பமானது,
சில வலிகள் துன்பமானது.
யார் தந்தார்கள் இந்த வலியை? நினைவுகளை யார் தரப் போகிறார்கள்?
இந்த வலியை நினைவுகளையும் விருப்பமில்லா விட்டாலும்,
சில வலிகளையும் நினைவுகளையும் விரும்பி ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
காலம் தான் அதை மாற்றி அமைக்கும் இல்லாவிட்டால் தக்க வைக்கும்.