வாழ விருப்பமற்று
விரக்திக்குள்ளாகும் பொழுதுகளில்
ஒரு கூடை நிறைய பூக்களை வாரித் தருகிறது நான் சேமித்த உனது நிபந்தனையற்ற நேசங்கள்.
எழுத எதுவுமற்று தனித்திருக்கும் பொழுதுகளில் ஒரு கூடை நிறைய
சொற்களை வாரித் தருகிறது நான் சேமித்த உனது காதல் நினைவுகள்.
உனது நேசங்களுக்கும். நினைவுகளுக்கும் இடையில்
ஊசலாடும் இந்த உள்ளத்தை
ஒரே ஒரு முறை மட்டும்
நீ ரட்சிக்க
வருவாயா..?
