AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆முத்தம்༆•❤꧂
உன் கன்னம்
தொட்ட மழைத்துளியாய்
எனது முதல் முத்தம்..!
#உன் நெற்றியில்
வழிகின்ற வியர்வையாய்
இரண்டாவது முத்தம்..!
#உன் இதழோடு
என் இதழ் சேர்த்து கொடுத்ததோர்
மூன்றாவது முத்தம்..!
#உன் நிலா
கண்ணில் கொடுத்ததோ
நான்காவது முத்தம்..!
#உன் உள்ளங்கை தொட்டதும்
உறவு காட்டிய
ஐந்தாவது முத்தம்..!
#நீ காதலியாய் கிடைத்து
அள்ளிக் கொடுத்து
அன்பு காட்டிய
ஆறாவது முத்தம்..!
#என் மனைவியாக கிடைத்தபோது
செல்ல மனைவியாக
கொடுத்த ஏழாவது முத்தம்..!
#நம் குழந்தைகளுடன்
சேர்ந்துகொடுத்த
அன்பிற்கு ஈடாக
கொடுத்த எட்டாவது முத்தம்..!
#நம் குழந்தைகளின்
ஆசைகள் நிறைவேறிய
கணம் அகம் மகிழ்ந்து
கொடுத்ததோ ஒன்பதாம் முத்தம்..!
#என்னின் கடைசி மணித்துளிகள்
உன் கைப்பிடித்து கரையும் நொடி இறுதிமுறியாய் கண்ணீருடன்
நீ கொடுக்கப் போகும்
பத்தாம் முத்தம்...!!