வாழ்க்கையில் தேடல்கள் அதிகரிக்கும் போது
ஏன் எதற்கு என்ற கேள்விகளும்
நம்மை கேள்வி கேட்கிறது
நம் தேடல்கள் வலியை நோக்கியா
இல்லை வலிக்கான நிவாரணத்தை நோக்கியா
இதற்கு பதில் எவரிடமும் இல்லை
வலி தரும் விடயங்களை தானே
மனம் வலுவாய் தேடுகிறது
வலியில் இருக்கும் சுமை தானே
சுகமாய் தெரிகிறது
பிறகு வலிகளுக்கு மருந்து எங்கே தேடுவோம்
வலியில்லாத தேடல்களாய் இருந்தால்
அவை சுவை குன்றி போயிருக்குமோ
என்னவோ
தினம் தினம் தேடலில் குறையில்லை
