AgaraMudhalvan
Epic Legend
காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இதயங்கள் இணைவது காதல்;
உறவால் உடல்கள் இணைவது காமம்.
அழகை ரசிப்பது காதல்;
அந்த அழகை அனுபவிப்பது காமம்.
பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்;
பிரதிபலனோடு பழகுவது காமம்.
எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்;
உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது காமம்.
காமமின்றி காதல் இல்லை என்பது ஆண்களின் எண்ணம்.
காதலுக்காகவே காமம் என்பது பெண்களின் நிலைப்பாடு.
ஓர் ஆண், தான் பாலியல் இன்பம் அனுபவிக்க எந்த யுக்தியையும் எடுப்பான்..
ஒரு பெண் அதை தடுப்பதற்கு முயற்சி செய்வாள்.
சில நேரங்களில் வலு கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறாள்.
தனது மனதைக் கவர்ந்திழுக்காத எந்த ஆண்மகனையும் தன்னோடு உறவாட பெண்கள் அனுமதிப்பதில்லை.
காதலின் ஆரம்பநிலையில் அவர்கள் தனது மனதினுள் நுழையாத காதலனோடு பாலியல் உறவில் ஈடுபட மறுக்கிறார்கள்.
அது ஆண்களுக்கு தெரிவதில்லை.
காதலர்களுக்கு பாலியல் உள்ளுணர்ச்சி உச்சகட்டத்தில் இருக்கும் போது அது வெளிப்படுத்தும் உணர்ச்சி மனதைக்களிப்பூட்டி கிளர்ச்சியடையச் செய்கிறது. அந்த கிளர்ச்சி தான் பெண்களுக்கு காதலாகவும், ஆண்களுக்கு காமமாகவும் உருப்பெற அடித்தளமிடுகிறது.
பாலியல் உணர்ச்சி என்பது ஆண்களின் தவறல்ல; அது அவர்களின் மரபணுக்களின் வெளிப்பாடு. ஆண்களின் பாலுறவு ஆர்வமும், பெண்களின் பாலுறவு ஆர்வமும் வித்தியாசமானது.
இவர்களில் நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று எவருமில்லை. ஆனால், இருவரும் வேறுபட்டவர்கள், மாறுபட்டவர்கள்.
ஒருவருக்கொருவர் உணர்வுகளை புரிந்து கொண்டால்தான், இருவருக்குள்ளும் இணக்கம் அதிகரிக்க வழிவகுக்கும்.