காதல் என்பது வாழ்க்கை
அதை உண்மையாக நேசிப்பவர்களுக்கு.
காதல் என்பது வலி
அதை வெளியில் சொல்லாமல் இருப்பவர்களுக்கு.
காதல் என்பது டைம் பாஸ்
அது பொழுது போக மட்டுமே கடலை போடுபவர்களுக்கு.
காதல் என்பது விளையாட்டு
அது பெண்ணை ஆணோ,
ஆணை பெண்ணோ விளையாட்டாக பார்க்கும் பொழுது.
காதல் போலியானது
அது ஏமாந்து போனவர்களுக்கு.
காதல் அழகானது
அது மனதை மட்டும்
பார்க்கும் பொழுது.
காதல் அவஸ்தை
அது பதில் ஒன்று வரும் வரை.
காதல் அழகான அவஸ்தை
அதை வெளிக்காட்டாமல் மறைக்கும் பொழுது.
காதல் ஒருவகை போதை
மனதை தவிர மற்றதை
பார்க்கும் பொழுது.
காதல் ஒண்ணுமே இல்லைங்க
அது காதலித்தே சலித்து போனவர்கள் சொல்வது.
காதல் எனக்கு தெரியல..
அது உலகில் வாழ தகுதி அற்றவனுக்கு.
மொத்தத்துல
காதல் என்பது
வேறு வார்த்தைகளால் கூட உரைக்க முடியாத கவிதை.