உன் கரங்கள்
அத்தனை வசீகரமானவை தெரியுமா?
உன் மொத்த உடலுக்கும்
சேர்த்து அக்கரங்கள்
தன்னை மெருகேற்றியிருக்கிறது..
அந்தக் கரங்களில் தான்
ஆறாத காயங்கள்
ஆற்றுப்படுத்தப் படுகிறது
கண்ணீர்த் துளிகள்
சுவடுகளேயற்று
துடைக்கப்படுகிறது
அன்பின் மிகுதியால்
அணைத்தும் கொள்கிறது
என்றேனும் உன்னைச் சந்தித்தால்
அந்தக் கரங்களை தொட்டு
முத்தமிட வேண்டுமென்று
தோன்றிக் கொண்டே இருக்கிறது
ஒரு பித்தேறிய நிலையில்
சொற்களைக் கட்டிக் கொள்ளும்
எனக்கு
உன் கரங்களை பற்றியே
சிந்தித்தலும்
கரங்களையே உற்றுப் பார்த்தலும்
ஒரு வான்நோக்கும் ப்ரியம்
அந்தக் கரங்கள் ஒருமுறை
என் தலைதடவிக் கொடுப்பது
போலொரு கனவு கண்டேன்
சட்டென விழித்துக் கொண்டேன்
விழித்திருப்பதின் துயரம்
அன்றுதான் உணர்ந்தேன்..
சரி
உன் கரங்களை
என் பக்கம் நீட்டேன்....
அத்தனை வசீகரமானவை தெரியுமா?
உன் மொத்த உடலுக்கும்
சேர்த்து அக்கரங்கள்
தன்னை மெருகேற்றியிருக்கிறது..
அந்தக் கரங்களில் தான்
ஆறாத காயங்கள்
ஆற்றுப்படுத்தப் படுகிறது
கண்ணீர்த் துளிகள்
சுவடுகளேயற்று
துடைக்கப்படுகிறது
அன்பின் மிகுதியால்
அணைத்தும் கொள்கிறது
என்றேனும் உன்னைச் சந்தித்தால்
அந்தக் கரங்களை தொட்டு
முத்தமிட வேண்டுமென்று
தோன்றிக் கொண்டே இருக்கிறது
ஒரு பித்தேறிய நிலையில்
சொற்களைக் கட்டிக் கொள்ளும்
எனக்கு
உன் கரங்களை பற்றியே
சிந்தித்தலும்
கரங்களையே உற்றுப் பார்த்தலும்
ஒரு வான்நோக்கும் ப்ரியம்
அந்தக் கரங்கள் ஒருமுறை
என் தலைதடவிக் கொடுப்பது
போலொரு கனவு கண்டேன்
சட்டென விழித்துக் கொண்டேன்
விழித்திருப்பதின் துயரம்
அன்றுதான் உணர்ந்தேன்..
சரி
உன் கரங்களை
என் பக்கம் நீட்டேன்....
