AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆அன்பை கொடுத்து அன்பை பெறுவோம்❤꧂
நன்றாக பழகியபின் சிலவிசயங்களுக்காக நம்மைவிட்டு பிரியநினைப்பவர்களை காயப்படுத்தாது விலகுங்கள்.
பழகிய காலத்துக்கான மரியாதை அதுதான்.
அவர்களுக்கு நம்மை பிடித்தது போன்று வேறொருவரையும் பிடித்திருக்கலாம் அதனால் நம்மை விட அவர்களை அதிகமாக நேசிக்கலாம்.
ஒருவேளை அவர்கள் உங்களை விட அழகாகவும் இருக்கலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும் கண்ணியமாக விலகி விடுங்கள் அதுதான் நட்புக்கும் பழகியதற்கும் ஒரு பண்பாடு.
மனதில் அன்பு உள்ளவர்கள் என்றால் கண்டிப்பாக உங்களை விட்டு இன்னொருவரை தேடிச் செல்ல மாட்டார்கள்.
அழகை தேடி செல்லுபவர்கள் ஆயிலுக்கும் அடுத்தது என்று தேடிக்கொண்டே தான் இருப்பார்கள்.
அவர்களது வாழ்க்கை தேடலிலேயே முடிந்து போய்விடும்.
தேடி அலைந்து கொண்டிருக்கும் ஒருவரை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யாமல் தேடிச் செல்லுங்கள் என அனுப்பி விடுங்கள்.
காத்திருங்கள் உங்களுக்கானவர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.
அவர்கள் உயிர் நட்பாகவும் இருக்கலாம் உறவாகவும் இருக்கலாம் உங்களை உயிருக்கு உயிராய் நேசிப்பவர்களாகவும் இருக்கலாம்.
இவர்களுடன் உங்கள் பயணம் எது வரை தொடர வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்து அதை வழிநடத்த வேண்டும்.
என்னைப் பொருத்தவரை ஒரு நல்ல நட்பு உயிராகவும் உறவாகவும் ஆயுள் முழுக்க குடும்ப சொந்தமாகவும் இருப்பதுதான் மிகச்சிறந்த நட்பாக இருக்க முடியும்.
முடிந்தவரை உங்களுக்கான நட்பை உங்கள் குடும்ப உறவாக குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் படியாக பழகுங்கள்.
ஆணாக இருந்தாலும் அவர்களது குடும்பத்துடன் வரவேண்டும் பெண்ணாக இருந்தாலும் அவர்களது குடும்பத்துடன் வரவேண்டும்.
இது மட்டுமே இன்றைய காலத்தில் வரைமுறை இல்லாத நீண்ட கால பந்தத்துடன் தொடர வேண்டிய நட்பாக இருக்கும்.
அன்பை கொடுத்து அன்பை பெறுவோம்.