ஒரு பிரிவை கூட
மிக அழகாய்
நிகழச் செய்வதில்
இந்த இயற்கைக்கும்
சில மனிதர்களுக்கும்
எத்தனை ஒற்றுமையான
திறமை இருக்கிறது...
இன்று உன் வாசம்
உணர்ந்து
உன் அழகை
ரசித்துக் கொண்டே
இருக்கிறேன்..
நாளைய
விடியலின் போது
நீ உதிர்ந்து கிளை விட்டு
பிரிவதை மறந்து...
ஒரு சிலரின்
பிரிவும்
நம் வாழ்வில்
இவ்வாறே
இயல்பாய் நிகழ்ந்து
விடுகிறது ...
அவர்களின் அன்பில்
நம்மை மறந்து நாம்
லயித்துக் கொண்டிருக்கும் போதே
திகட்டாத அன்பை தந்து
நம் வாழ்வை வண்ணமயமாக்கி
நினைவெனும் வாசனையை
நம் மனதில் விதைத்து விட்டு
ஒரு மலர் உதிர்வதைப் போல்
மறைந்து விடுகின்றனர்....
மிக அழகாய்
நிகழச் செய்வதில்
இந்த இயற்கைக்கும்
சில மனிதர்களுக்கும்
எத்தனை ஒற்றுமையான
திறமை இருக்கிறது...
இன்று உன் வாசம்
உணர்ந்து
உன் அழகை
ரசித்துக் கொண்டே
இருக்கிறேன்..
நாளைய
விடியலின் போது
நீ உதிர்ந்து கிளை விட்டு
பிரிவதை மறந்து...
ஒரு சிலரின்
பிரிவும்
நம் வாழ்வில்
இவ்வாறே
இயல்பாய் நிகழ்ந்து
விடுகிறது ...
அவர்களின் அன்பில்
நம்மை மறந்து நாம்
லயித்துக் கொண்டிருக்கும் போதே
திகட்டாத அன்பை தந்து
நம் வாழ்வை வண்ணமயமாக்கி
நினைவெனும் வாசனையை
நம் மனதில் விதைத்து விட்டு
ஒரு மலர் உதிர்வதைப் போல்
மறைந்து விடுகின்றனர்....