♥️MINSAARAKKANNAA♥️
Newbie
எல்லோரையும்
பார்த்துப் பார்த்துக்
கவனித்துக்கொள்ளும்
அவள்களுக்கு
சமயங்களில்
இளைப்பாற சிறு நிழலும்
கிடைப்பதில்லை
பிறர் நலக்குறைவுகளை
உடனிருந்து கவனிக்குமவளின்
நோய்மைகளில்
சம்பிரதாயத்திற்கேனும்
நலம் விசாரிக்க எவருமில்லை
பிறர் ருசியறிந்து சளைக்காமல் சமைத்துப்போடுபவளுக்கு
சமயங்களில்
சாப்பிட்டாயா எனக் கேட்க
ஒரு நாதியில்லை
பிறர் துன்பங்களைத் தேற்றி
அருகிருப்பவளுக்கு
மனமுடைந்து கதறியழுகையில்
கண்ணீர்த்துடைத்திட
ஒரு கரமேனும் நீள்வதில்லை
எப்போதும்
அப்படித்தான்
அவள் வருத்தங்களின்
பாரவண்டியை
அவளேதான் தனியாக சுமந்துசெல்ல வேண்டியிருக்கிறது
எல்லோரையும்
கவனித்துக்கொள்ளும்
அவளுக்கு
தன்னைத் தானே
கவனித்துக்கொள்ளத் தெரியாதா
என்ன
இருந்தும்
இடறி விழுகையிலேனும்
கரம் பற்றி தூக்கிவிட
ஓர் ஆள் இருப்பதில்லை
என்பதில்தான்
சிறு வருத்தம்
அவளுக்கு
பாவம்
அவள்கள்
எல்லோரையும்
பார்த்துப் பார்த்துக்
கவனித்துக்கொள்ளும்
அவள்களுக்கு
சமயங்களில்
இளைப்பாற சிறு நிழலும்
கிடைப்பதில்லை...!
பார்த்துப் பார்த்துக்
கவனித்துக்கொள்ளும்
அவள்களுக்கு
சமயங்களில்
இளைப்பாற சிறு நிழலும்
கிடைப்பதில்லை
பிறர் நலக்குறைவுகளை
உடனிருந்து கவனிக்குமவளின்
நோய்மைகளில்
சம்பிரதாயத்திற்கேனும்
நலம் விசாரிக்க எவருமில்லை
பிறர் ருசியறிந்து சளைக்காமல் சமைத்துப்போடுபவளுக்கு
சமயங்களில்
சாப்பிட்டாயா எனக் கேட்க
ஒரு நாதியில்லை
பிறர் துன்பங்களைத் தேற்றி
அருகிருப்பவளுக்கு
மனமுடைந்து கதறியழுகையில்
கண்ணீர்த்துடைத்திட
ஒரு கரமேனும் நீள்வதில்லை
எப்போதும்
அப்படித்தான்
அவள் வருத்தங்களின்
பாரவண்டியை
அவளேதான் தனியாக சுமந்துசெல்ல வேண்டியிருக்கிறது
எல்லோரையும்
கவனித்துக்கொள்ளும்
அவளுக்கு
தன்னைத் தானே
கவனித்துக்கொள்ளத் தெரியாதா
என்ன
இருந்தும்
இடறி விழுகையிலேனும்
கரம் பற்றி தூக்கிவிட
ஓர் ஆள் இருப்பதில்லை
என்பதில்தான்
சிறு வருத்தம்
அவளுக்கு
பாவம்
அவள்கள்
எல்லோரையும்
பார்த்துப் பார்த்துக்
கவனித்துக்கொள்ளும்
அவள்களுக்கு
சமயங்களில்
இளைப்பாற சிறு நிழலும்
கிடைப்பதில்லை...!