• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

காதல்

MaecusTrescothick

Favoured Frenzy
தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..


காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும்
திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்...



உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்...


கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்...
 
சத்தமின்றி
ஒரு முத்தம்
தினமும் உனக்கு
நீயறியாமல் கொடுத்து
மகிழ்கிறேன்
மௌனமாய் மனதுக்குள்


உனது வருகையே
நிர்ணயிக்கும்
எனக்கான
மணித்துளிகள்
உறைவதையும்
உருகுவதையும்


ஊடலின்
விரிசலை
காதலில்
நெய்கிறாய்


இருளெனை
சூழ்ந்து கொண்டாலும்
உன் நினைவொளியில்
வாழ்வேன்
நானும் அழகிய
உலகில் உன்னோடு
 
இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்...
(ஆனந்த யாழாய்)


இளைப்பாற
இடம் கேட்டேன்
இதயத்தில்
இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்...

உன்
நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு...


ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட



குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்...


பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட
 
எனக்கு மட்டும் மாதம் முப்பது நாளும் பெளர்ணமிகள்.. நாளும் இந்த நிலாவின் (@Nilaani) மதிமுக தரிசனங்கள் கிடைப்பதால் !:holiday:
 
"அடைமழையில் தப்பித்து உன் அனல் பார்வையில் சிக்கிக்கொண்டேன்”

“என் வாழ் நாள் தேடலிலே கிடைத்த மிகச்சிறந்த பரிசு உன் ஞாபங்கள் மற்றும் உன் நினைவுகள் மட்டும் தான்.”

“உன் பார்வை பிடியில் இருந்து ஒவ்வொருமுறையும் தப்பிக்க நினைத்து தோற்றுக் கொண்டே இருக்கின்றேன்.”

“எந்த நேரமும் பேசிக் கொண்டே இருப்பது மட்டும் காதல் அல்ல
புரிந்து கொண்டு பேசாமல் இருப்பதும் உண்மையான அன்பு தான் அதை புரிந்து கொள்ளவும் ஒரு மனம் வேண்டும்.”
 
முதன் முதலில்
நிறைந்த சபையில்
தன்னை பெண்பார்க்க
கூடியிருக்கும் கூட்டத்திற்கு
அச்சத்தோடு காபி கொடுக்கும்
தருணங்களிலே...

நீண்ட பெண்பார்க்கும்
படலத்தின் வரிசையில்
முதன் முதலில்
பார்த்தவுடனே எனக்கு
பெண்ணை பிடிச்சிருக்கு
என சொல்லும்
ஆணின் முகத்தை
மீண்டும் ஒருமுறை பார்க்கும்போது

வெட்கம் அந்த பெண்ணின் முகத்தை ஒரு நொடி
சிவக்க வைத்துதான் செல்கிறது...
 
மஞ்சள் பூசிய சந்தன நிலவு...
கொஞ்சி சிரிக்கும் மாலை வெயில்...
பனித்துளிகள் கன்னக் குழியில் விழுந்து
பல்லாங்குழி ஆடுமழகில் பூவிதழ் ஆகிறாள்......

தொட்டால் சுருங்கும் இலைகள் போல
தொடாமல் அழகாய் முகம் சுழித்தாள்...
சுண்டு விரல் நகம் கடித்து
கண்கள் மயங்க எனைப் பார்த்தாள்......

கைவிரலின் வண்ணக் கோலம் மறந்து
கால்களின் விரலில் மௌன கோலமிடுகிறாள்...
கழுத்தின் மணியைக் கைகளில் எடுத்து
புதிதாய் எண்களைப் பயின்றிட விழைகிறாள்......

நாணம் கண்டு நாணல் சாய்கின்றது...
வானில் எதிரொளியாய் மின்னல் பூக்கின்றது..
இமைகள் இரண்டும் சிறகுகள் விரிக்கின்றது...
தேன்சிட்டாய் படபடவென பலமுறை துடிக்கின்றது......

பூக்களின் புன்னகையில் உலா போகிறாள்...
வெட்கத்தின் இலக்கியத்தில் விளையாடி வருகிறாள்...
குளிர்ந்த காற்றில் தேகம் நடுங்குகிறாள்...
பளிங்கு விழிகளால் என்னை விழுங்குகிறாள்......
 
கண்களில் கசியும் - அந்த
கள்ளச் சிரிப்பினில் எந்தன்
உள்ளம் சிதறி
சின்னாபின்னம் ஆனதடி....
உன் இதழூறும் எச்சிலைக்கூட
செந்தேனாய் மாற்றிய
விந்தையை எங்கிருந்து கற்றாயடி?
உன் உடல் நனைக்கும்
வியர்வை முழுதும்
குளிர் சந்தனமாய் மணக்கும்
மாற்றங்கள் உன்னில்
எங்கிருந்து வந்ததடி?
மயக்கத்தில் என்னை ஆழ்த்தி...
மோகத்தில் என்னை முக்கி
முத்தமிழில் கவிஎழுத வைத்த
அற்புதங்கள் உன்னால்
நிகழ்ந்த மாயங்கள்தானடி...!
இடைஇடையே உன்
இடை தழுவும் மேகலை
நழுவும்போது எந்தன்
போர் கலை எல்லாம் மறந்து - மனம்
போர்க்களம் ஆனதடி....!
மேலுதட்டின் மேல்முளைத்த
பூனை மீசையினை நான்
தடவும் போது - உன்
கண்கள் சொருகி நீ
ஏகாந்த நிலையில் முனகும்போது
என் ஏகாந்தம் உடைந்து
பரமானந்தக் கடலில்
மூழ்கி மூச்சுத்திணறி
மடிந்தே போகிறேனடி...!
கீழுதட்டை கடித்து உன்
இரு பற்கள் கொஞ்சம் தெரிய
நீ கிறக்கத்தில்
செவ்வரியோடிய பாதிக்கண்கள்
திறந்து என்னை பார்க்கையில்
உன்மத்தம் பிடித்து என்
மனக்குரங்கு தாவித்தாவி
குதிக்குதடி - செந்தணலாய்
வெந்து வெந்து சாகுதடி....!
 
என் முத்த சத்தங்களில், உன் வெட்க சிணுங்கள் அழகோ அழகு!

உன் கண்ணக்குழிக்கும், வெக்கத்திற்கும் தொடர்பு உண்டு! அதில் தொலைந்து போனவர்கள் ஆயிரம் உண்டு!

அவனின் செல்ல இம்சையில் பெண்ணவள் தடுமாற, நாணம் குடியேற, அவனது அணைப்பில் கட்டுண்டு கிடக்கும், அவள் பெண்மை!!

ஆண்களுக்கும் வெட்கப்பட தெரியும் என்று உன்னை கண்ட பின் தானடி புரிந்தது!

முத்தங்களின் முன் நீளும் சிரிப்பலைகளில், பொதிந்த வெட்கம் காதலின் அத்தியாவசியம்!
 
விடுதலையில்லா
சட்டம் வேண்டும்
உன் காதல் பிடிக்குள்
சிக்கிக்கிடக்க!

மணலில் கிறுக்கியதை
அலை வந்து அழித்தாலும்
நாம் மனதில் கிறுக்கியது
மரணம் வரை அழியாது!

என் இதயத்தின் அதிகபட்ச தேடல்,
நீ பேசும் வார்த்தைகள் மட்டும் தான்


சிந்திக்கும் முன்னே விழுந்தேன்!
சிந்தித்த பிறகு, என்னையே இழந்தேன்!
அழகே !
உனது கண்களே
கவிதை எழுதும் போது,
உனது கைகளுக்கு என்ன வேலை?
நாணலும்
நாணம் கொண்டு
தலைசாய்ந்தது
உன் காதல்
மொழியில்....
 
சத்தமின்றி
ஒரு முத்தம்
தினமும் உனக்கு
நீயறியாமல் கொடுத்து
மகிழ்கிறேன்
மௌனமாய் மனதுக்குள்
 
மனமும்
குழந்தை தான்
உன்னையே
நினைப்பேன்
என்று பிடிவாதம்
பிடிப்பதில்


சற்றே
நீ விலகினாலும்
இருளாகுது
என்னுலகம்
 
காற்று கூட காகிதம் எடுத்து கம்பன் தமிழில் கவிதை எழுதுமே, கனவில் காதலியை கண்டுவிட்டான் என்றால்...

உனக்காக எழுதப்பட்ட கவிதைகள் எல்லாம் தவழ்ந்து ஆட நினைக்கிறது, உன் மடியினிலே சறுக்கி விளையாட துடிக்கிறது உன் இடைச் சரிவினிலே!
 
உன் கண்களில் அலைவது கருவிழியா? இல்லை காந்தமா? கவருதடி என் மனதை - அது கதியற்று உன் பின் அலையுதடி!

அடர்ந்த வனத்தில் மின்மினிப்பூச்சி போல் பளிச்சுப் பளிச்சென்று பிரகாசிக்கும் அவள் கண்கள், மதியின் ஒளியில் ஒளி வீசும் அவள் காதல்!
 
கோபம் வருவதற்கு தகுதியே
உரிமை தான்.. உரிமை
இருந்தா தான் கோபமும்
செல்லுபடியாகும்.. அன்பு
இருந்தா தான் அந்த கோபமும்
மதிக்கப்படும்..!

உன் கோபம் காற்று மோதியதும்
உதிர்ந்திடும் இலையை போல..
என் கவிதையை பார்த்ததும்
மறைந்து போய்விடும்..!
 
உச்சமான என் சினத்தை
உன் நெற்றி முத்தம்
பற்றி அணைத்தது..!

இதழினை மெதுவாய் வருடவே
இமைகளை மூடினேன்..
திருடவே இதயத்தின் துடிப்புகள்
கூடவே இடையினை இழுக்கிறேன்
இதழினை கடித்திட..!
 
எந்த ஜென்மத்தில்
செய்த தவமோ
இந்த ஜென்மத்தில்
கிடைத்தாய்
நீயும் வரமாய்
என்னவனே


உனக்கான எதிர்பார்ப்பில்
இத்தனை காதலென்றால்
விலகியே இருப்பேன்
நம் காதலுக்காக
 
உன் துறுதுறு பாவனைகளால்
குழம்பிப்போனேன்.

உன் அழகையா இல்லை
பாவனைகளை ரசிப்பதா என்ற
நிபந்தனையில் என் பார்வைச் சிதறல்கள்.

உனைப்பிரிந்த நேரங்களிலும் என்னில்
ஸ்பரிசமாய் நிலைத்திருக்கும்
உன் வெட்கச் சிணுங்கல்கள்.
 
Top