゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
மாலை வணக்கம்
முதலில் சிரமமாக இருப்பது
பின்னர் பழகி விடுகிறது...
முதலில் ஏற்றுக் கொள்ளவே
முடியாதிருப்பது காலப்போக்கில்
ஏற்றுக் கொள்ளப் படுகிறது...
முதலில் துளியும்
மறக்காதது பின்னர்
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து போகிறது...
முதலில்
பிடிவாதம் பிடித்த மனது
பின்னர் அமைதியாகிப் போகிறது...
ஆரம்பத்தில்
மிக இறுக்கமாக இருக்கும் உள்ளம்
பின்னர் அப்படியே இளகியதாகிறது...
முதலில் ஓர் அடி
எடுத்து வைக்கவும்
சிரமப்பட்ட உள்ளம்
இப்போதெல்லாம்
எத்தனை அடிகளை
எடுத்து வைக்கவும்
துளியும் தயங்குவதில்லை...
இப்படியான சிரமப்பட வைக்கும் உணர்வு
மனதைக் குடைந்து
உணர்வுகளை உடைத்து
நம்பிக்கையை துறந்து
அப்படியே அமர வைக்கிறது
அமைதியாக...
இருந்தும் இப்படித்தான்
எதை சிரமமென
நீ பார்க்கின்றாயோ
அது உன் அத்தனை உயர்வுகளையும் துண்டித்து விடும்
அதற்கெதிராக நீ போராடாத வரைக்கும்...
அது மனிதர்களாய் இருக்கட்டும்
மற்றவையாய் இருக்கட்டும்...!!!
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚


Reactions: MadaraUchiha, AgaraMudhalvan and Maraa