காத்திருப்பு இனிப்பான
கசப்பேனா
உணர்ந்துக்கொண்டேன்
என்னவனே...
கதிரவன்
காத்திருப்பு
விடியலை தேடி..
நிலவின்
காத்திருப்பு
இரவின்
இருளை தேடி..
நாளைய
காத்திருப்பு
இன்றைய
இறுதி
நொடியின்
தேடல்..
எனக்கான
தேடல் நீ
உனக்கான
தேடல் நான்
காத்திருக்கிறேன்
உனக்காக
நீ தவிக்கவிட்ட
இரவின்
காத்திருப்பை
பொய்யாக்கி
மெய்ப்பொருள்
காண வா..!
கண வா..!
கண்டம் விட்டு
கண்டம் தாவி
உழைக்கும்
வருமான
வசதிகள்
தேவையில்லை
தின
மும் உன்
மடிசாயும் இரவு
உறக்கம் போதும்...