MrNiceGuy
Favoured Frenzy
மனைவியாக நீ என் வாழ்வில் வந்தாய்,
ஆனால் உன் பாசத்திற்காக
இன்றும் ஒரு குழந்தையாய் ஏங்குகிறேன், உன் ஒரு சின்ன சிரிப்புக்காக,
உன் ஒரு அன்பான வார்த்தைக்காக,
வெளியில் எவ்வளவு வலிமையானவனாக இருந்தாலும்,
உன் முன்னால் மட்டும்
உன் பாசத்தைத் தேடும்
ஒரு சின்ன மனசுதான் நான்…
நீ கோபப்பட்டால் சமாதானம் தேடுகிறேன்,
நீ மௌனமாக இருந்தால்
உன் வார்த்தைகளுக்காக தவிக்கிறேன்…
நீ என்னை அணைத்துக்கொள்ளும் அந்த நொடி,
என் எல்லா கவலைகளும் மறந்துவிடுகின்றன…
மனைவியே,
உன் இதயத்தில்
நான் கணவனாக மட்டுமல்ல,
உன் அன்புக்காக ஏங்கும்
அந்த குழந்தையாகவும் இருக்க வேண்டும்…

ஆனால் உன் பாசத்திற்காக
இன்றும் ஒரு குழந்தையாய் ஏங்குகிறேன், உன் ஒரு சின்ன சிரிப்புக்காக,
உன் ஒரு அன்பான வார்த்தைக்காக,
வெளியில் எவ்வளவு வலிமையானவனாக இருந்தாலும்,
உன் முன்னால் மட்டும்
உன் பாசத்தைத் தேடும்
ஒரு சின்ன மனசுதான் நான்…
நீ கோபப்பட்டால் சமாதானம் தேடுகிறேன்,
நீ மௌனமாக இருந்தால்
உன் வார்த்தைகளுக்காக தவிக்கிறேன்…
நீ என்னை அணைத்துக்கொள்ளும் அந்த நொடி,
என் எல்லா கவலைகளும் மறந்துவிடுகின்றன…
மனைவியே,
உன் இதயத்தில்
நான் கணவனாக மட்டுமல்ல,
உன் அன்புக்காக ஏங்கும்
அந்த குழந்தையாகவும் இருக்க வேண்டும்…





achachooi vekka vekkama varudhey perumaley

