தெரியாத மௌனங்கள்
மழை தூறிக் கொண்டிருந்தது. அவன் அவசரமாக அவளை தேடி ஓடினான். அவளும் நின்று மழையை ரசித்துக்கொண்டு இருந்தாள்.
மழை எனக்குப் பிடிக்கும் மழையில் நடந்து செல்லலாமா என்று மெதுவாக கேட்க.
"ஆனால் நான் நீ நனைந்துவிடக்கூடாது என்பதால்தான் இந்த குடையை கொண்டு வந்தேன்," என்று அவன் கூறினான், அவர்களின் கண்கள் சந்திக்க, ஒரு மௌனம் பேச தொடங்கியது.
அவள் மெதுவாக சிரித்தாள். "நீ எப்போதுமே அப்படித்தான், இல்லையா? என் அருகில் இருக்கும்போது கூட, என்னை அன்பாக கவனிக்கிறாய்... ஆனா சொல்றதில்லை."
அவன் ஒரு நிமிடம் அவளை பார்த்தான். "எல்லா விஷயங்களும் சொல்லிக்காட்ட வேண்டியதில்லை, சில நேரம் உணரலாம்," என்றான்.
அவள் கண்களில் ஓர் வெளிச்சம். மழை பொழிந்துகொண்டே இருந்தது, ஆனால் அவர்களுக்குள் ஒரு புதிய தொடக்கம் பிறந்தது.
